கிளிநொச்சிக்கு பிரதி அமைச்சர் புத்திக பத்திரன விஜயம்

Report Print Suman Suman in அரசியல்

கிளிநொச்சிக்கு பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கிளிநாச்சி - பரந்தன், இரசாயன தொழிற்சாலை அமைந்திருந்த பகுதிக்கு பிற்பகல் அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன் போது, இரசாயன தொழிற்சாலை பணிகளை பார்வையிட்டதுடன் ஆனையிறவுப் பகுதியில் அமைந்துள்ள உப்பளம் ஆகியவற்றையும் பார்வையிட்டுள்ளார்.

இவ் விஜயத்தில் அமைச்சர், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers