தமிழகத்திற்கு விஜயம் செய்த இலங்கையின் அதிகாரிகள்

Report Print Ajith Ajith in அரசியல்

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகள் குழு ஆராய்ந்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ தலைமையிலான குழுவினர் தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்டு அகதிகளின் மீள்திரும்புகை தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இந்தக்குழுவில் இலங்கையின் குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க உட்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன்போது அகதிகள் மத்தியில் பிரச்சினையாகியுள்ள பிறப்புச்சான்றிதழ் மற்றும் பிரஜாவுரிமை சான்றிதழ்கள் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அகதிகள் சுயமாகவே மீளத்திரும்புவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

Latest Offers