ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட வைத்தியர்களின் பரிசோதனையையடுத்து மேலதிக சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் பிரபாத் வெரவத்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதி முக்கியஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது.