அரச சேவையில் இணைந்த அனந்தி சசிதரன்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

வடமாகாண முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மீண்டும் அரச சேவையில் இணைந்து கொண்டிருக்கின்றார்.

போருக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் 2013ம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டார்.

மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர் உறுப்பினராக இருந்து இறுதி ஒன்றரை ஆண்டுகள் மாகாண மகளிர் விவகார அமைச்சராக பதவி வகித்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் மாகாணசபையின் 5 வருட ஆட்சி நிறைவடைந்திருக்கும் நிலையில் மீண்டும் அரச சேவையில் அவர் இணைந்து கொண்டிருக்கின்றார்.

Latest Offers