சுவிஸ் நாட்டின் முதன்மைச் செயலாளர் மற்றும் சிறீதரன் எம்.பி முக்கிய சந்திப்பு!

Report Print Kaviyan in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதரக முதன்மைச் செயலாளர் கிசெல ஸ்செலப் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வடக்கு மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதரக முதன்மைச் செயலாளர் கிசெல ஸ்செலப் இன்று வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த இருவருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது வடக்கில் தற்போது மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை, இளைஞர் யுவதிகள் எதிர்நோக்கியுள்ள வேலையில்லா பிரச்சினைகள் குறித்து இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

Latest Offers