மாகந்துரே மதுஷின் பணத்தில் திரைப்பட தயாரிப்பு: ரஞ்சன் ராமநாயக்க தகவல்

Report Print Steephen Steephen in அரசியல்

துபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாதாள உலக தலைவர் மாகந்துரே மதுஷிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு திரைப்படம் தயாரித்த, தயாரிப்பாளர்கள் இலங்கையில் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அவற்றில் சில படங்கள் துபாய் நாட்டில் படமாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சிலர் மதுஷின் பணத்தை கொண்டு திரையரங்குகளை கொள்வனவு செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மதுஷ் துபாயில் நடத்திய விருந்திற்கான அழைப்பு தமக்கு கிடைத்தும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தை தவற விட்டதால், அதில் கலந்துக்கொள்ள முடியாது போனது எனவும் இலங்கையின் கோடிஸ்வர வர்த்தகர் மற்றும் அவரது மனைவி பற்றிய தகவல்களும் தன்னிடம் இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers