பொதுஜன பெரமுன அலுவலகத்தில் கோத்தபாயவுக்கு தனி அறை!

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு பிரத்தியேக அறை ஒதுக்கப்பட உள்ளதுடன் அவர் செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடவசதிகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய அதிகளவான இடவசதிகளை கொண்ட இரண்டு மாடி கட்டிடத்தை கட்சியின் பணிகளுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்கு அறை ஒதுக்கப்பட உள்ளது.

இதனடிப்படையில் கோத்தபாய ராஜபக்ச அடுத்த சில தினங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக செயற்பாட்டு ரீதியான அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers