அரசியலமைப்பு பேரவையை கலைக்க வேண்டும்: எஸ்.பி.திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

பெரிய எதிர்ப்பார்ப்புடன் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஊழல் மிக்கதாக மாறியமைக்கான பொறுப்பை சபாநாயகரும் பிரதமரும் ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமிக்க ஜனாதிபதி அனுப்பிய பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவை மோசடியான முறையில் நிராகரித்துள்ளது. இதனால், நிதித்துறை செயலிழந்துள்ளது.

இதன் காரணமாக அரசியலமைப்பு பேரவையை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers