சுகாதார அமைச்சரின் தகவலை நிராகரித்த வைத்தியர்கள்!

Report Print Ajith Ajith in அரசியல்

நாட்டுக்கு தேவையான திரவப்பாலில் 10 வீதத்தை மாத்திரமே நாட்டுக்குள் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறிய தகவலை அரச மருத்துவர் சம்மேளனம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் நாட்டில் 40 வீத தேவையை பூர்த்தி செய்யக்கூடிய பால் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சர் மக்களை பிழையாக வழிநடத்துவதாக மருத்துவர் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன் அமைச்சர் பால்மா உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருவதாகவும் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Offers