எந்த தேர்தலையும் சந்திக்க தயார்: அமைச்சர் சந்திராணி

Report Print Steephen Steephen in அரசியல்

நடத்தப்பட வேண்டிய அனைத்து தேர்தல்களையும் அரசாங்கம் நடத்தும் எனவும் எந்த தேர்தலையும் சந்திக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற தொழில் முனைவோருக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சி தனித்து தீர்மானிக்க முடியாது.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு விரும்பும் எவரும் தமது பலத்தையும் பங்களிப்பையும் வழங்கலாம். அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவராகவோ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்தவராக இருப்பது தடையாக இருக்காது.

மாகாண சபைத் தேர்தல் தாமதிக்கப்பட்டு வருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி காரணமல்ல. சகல கட்சிகளும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் சந்திராணி பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers