தேசிய அரசாங்கத்தில் இணைய விரும்பும் சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரத்தை கட்சியை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருப்பத்துடன் இருப்பதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு அரசாங்கத்தில் இணைய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பதுளையில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் ஹரின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி ஏற்கனவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. அமைச்சரவையின் எண்ணிக்கை 30க்கும் மேல் அதிகரிக்கப்பட கூடாது என்று கட்சியிலும் சிலர் கருதுகின்றனர்.

மூத்த அமைச்சர்கள் பதவி விலகி ஏனையோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதால், தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகின்றோம்.

எனினும் அமைச்சரவையின் எண்ணிக்கையை 35 ஆக வரையறுக்கலாமாக என்பது குறித்தும் கலந்துரையாடி வருகின்றோம் என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers