கொக்கேய்ன் பயன்படுத்தும் எம்.பிக்கள் இருந்தால் இரத்த பரிசோதனை செய்யலாம்: சரத் பொன்சேகா

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் கொக்கேயன் போதைப் பொருளை பயன்படுத்தும் நபர்கள் இருப்பார்களாயின் அவர்களின் இரத்தத்தை பரிசோதிக்க முடியும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொக்கேய்ன் பயன்படுத்தியவர்களை போல் சிலர் நாடாளுமன்றத்தில் நடந்துக்கொள்கின்றனர். எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொக்கேய்ன் பயன்படுத்துகின்றனர் என்பதை நம்ப முடியாது.

இப்படியான விடயங்களை நாய்களை போல் மோப்பம் பிடித்து கூற முடியாது. சந்தேகம் இருந்தால், இரத்த பரிசோதனை செய்து அறிக்கையை பெற்றுக்கொள்வது நல்லது.

ஒருவர் கூறியுள்ளார் என்பதற்காக செயற்பாடுகளை முன்னெடுப்பது சிரமம். பெரும்பான்மையானவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள நேரிடும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.