கொக்கேய்ன் பயன்படுத்தும் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் இல்லை - லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

கொக்கேய்ன் போதைப் பொருளை பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தற்போதைய நாடாளுமன்றத்தில் இல்லை என பொறுப்புடன் கூறுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி பாத்ததும்பர தொகுதியின் புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் திலின பண்டார தென்னகோனுக்கு வரவேற்பளிக்கும் வகையில் வத்தேகம நகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள் என்ற வகையில் பல நபர்களுடன் பழக வேண்டியுள்ளது. அவர்களில் படித்த புத்திசாலிகள் மட்டுமல்லாது பல மட்டத்திலான நபர்கள் உள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பல நபர்களுடன் பழகுவது குறித்து அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துவது தவறு.

எவ்வாறாயினும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அதனை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி விசாரணை நடத்த வேண்டும் என தான் பிரதமரிடம் கூறியதாகவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers