நாமல் சொன்னது பொய்! அமைச்சர் ஹரின்

Report Print Murali Murali in அரசியல்

விமானச் சீட்டுகளை கொள்வனவு செய்ய முடியாமல், குவைட் நாட்டுக்கு பணிபுரிய சென்ற 30 பணியாளர்கள் தங்கியிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்து பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

இது குறித்து குவைட்டிலுள்ள இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியத்துடன் தான் உரையாடியதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

எனினும், நாமல் ராஜபக்ச தெரிவிக்கும் வகையிலான எந்த சம்பவமும் அங்கு இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 30 இலங்கைப் பணியாளர்கள் குவைட்டில் விமான டிக்கட்டை கொள்வனவு செய்ய முடியாத நிலையில், தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

குவைட்டுக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் தன்னிடம் இதனை தெரிவித்ததாக நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.