இலங்கையின் உயர்மட்ட அரசியல் தலைமைகளின் முன்னிலையில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பங்களிப்பை தாம் மறக்கவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்கள் ஏற்றுக்கொண்டமை காரணமாகவே அவர் மக்களுக்காக சேவை செய்தமை காரணமாகவே அவரால் அரசியலில் பல ஆண்டுகள் நீடிக்க முடிந்திருக்கிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜோன் அமரதுங்கவின் 40 வருட அரசியல் வாழ்க்கையை குறிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இந்தநிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோரும் பங்கேற்றனர்.