ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து பிரச்சாரத்தை அடிப்படையாக கொண்டது

Report Print Ajith Ajith in அரசியல்

அமைச்சர்கள் கொக்கெய்ன் பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து, பிரச்சாரத்தை அடிப்படையாக கொண்டது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை நேற்று கொழும்பில் சந்தித்த அவர், ரஞ்சனின் தகவல் ஒருஅமைச்சருக்குரிய தகவல் அல்ல என்றும் அமைச்சர் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் இருக்குமானால் ரஞ்சன் ராமநாயக்க ஏன் அதனை நேரடியாக அதிகாரிகளிடம் கூற முடியாது.

இதனை விடுத்து அவர் பிரச்சாரத்துக்காக அறிக்கைகளை விடக்கூடாது என்றும் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளின் மகன்மார் கொக்கெய்ன் பயன்படுத்துவதாக ரஞ்சன் கூறியிருப்பதுவும் பிரச்சாரத்தை மையப்படுத்திய தகவல் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

பிரச்சாரம் செய்ய வேண்டுமானால் ரஞ்சன் ராமநாயக்க, வேறு வழிகளை கையாள வேண்டும். அமைச்சர்களை பயன்படுத்த கூடாது என்றும் அமைச்சர் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.