மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைக்க வடிவேல் சுரேஸ் நடவடிக்கை

Report Print Thiru in அரசியல்

பதுளை - ஊவாபரணகம பிரதேசத்திற்குட்பட்ட அலகொல்ல தோட்டத்தில் 2014ஆம் ஆண்டு மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 45 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அலகொல்ல தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது குறித்த இடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் முன் எச்சரிக்கை நிலச்சரிவு தடுப்புத்திட்டத்தின் மண்சரிவு பிரதேசமாக இனங்காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய வீடுகள் அமைப்பதற்கு பொருத்தமான காணியும் மலை இலக்கம் 13 இல் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான எந்தவித நடிவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில் மக்கள் அச்சத்தில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தோட்ட மக்கள் குறித்த விடயத்தினை பெருந்தோட்ட கைத்தொழில இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள்¸ பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள். பதுளை மாவட்ட செயலாளர்¸ ஊவாபரணகம பிரதேச செயலாளர்¸ தோட்ட முகாமையாளர் கிராமசேவகர் ,பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.