ஜனாதிபதி மாத்திரமின்றி அனைவரும் அரசாங்கத்தை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்

Report Print Sinan in அரசியல்

ஜனாதிபதி மாத்திரமின்றி முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் அரசாங்கத்தை விமர்சிக்க ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மாத்திரமின்றி முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் அரசாங்கத்தை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதில் இருந்து தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு விரோதமான அரசாங்கம் என்பது தெளிவாக தெரிகின்றது.

அரச சொத்துக்களை விற்பனை செய்வது, தேர்தலை பிற்போட்டுக் கொண்டிருப்பது, வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளமை என நிறைய சவால்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.