நாட்டின் வளங்கள் மூலமாக முழுமையாக நன்மையடைய இயலாது

Report Print Gokulan Gokulan in அரசியல்

பிரிந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி ஒற்றுமையுடன் முன்னோக்கி பயணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

கீர்த்தி விஜயபாகு ரஜ மகா விகாரையில் அத்ரபத்ர நிகழ்வு நேற்று நடைப்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஒரு நாடாக நாம் முன்னோக்கி பயணிக்கையில் நாம் பிரிவினையுடன் செயற்பட்டால் அதன் நன்மையை அடைய இயலாது.

எனவே நாம் பாகுபாடுகளை கலைந்து ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் செயற்பாட்டால் மாத்திரமே உலகை வெல்லலாம்.

நாம் இன்று பிரிந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்பி ஒற்றுமையுடன் முன்னோக்கி பயணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

கிராமங்களிற்கு கிராமம் நாம் பிரிந்து செயற்படுகின்றோம். பிரதேசத்திற்கு பிரதேசம் பிரிந்து வாழ்கின்றோம். பல்வேறுப்பட்ட முறைகளில் பிரிவினை எம்மை ஆட்கொண்டுள்ளது.

நாம் அப்பிரிவினைகளை நிறுத்தாவிட்டால் நாடென்ற ரீதியில் எம்முடைய நாட்டின் வளங்கள் மூலமாக முழுமையாக நன்மையடைய இயலாது.

நம் நாடு பாக்கியசாலியான நாடு. எம்மிடம் பல வளங்கள் உள்ளன. இவ்வனைத்து வளங்களும் இயற்கையாக கிடைக்க பெற்றுள்ளன.

இவ் அனைத்தையும் காட்டிலும் எம்மிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மனித வளங்கள் உள்ளன. அவர்களை சரியான பாதையில் பயணிப்பதற்கு நாம் அவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும்.

இப்பயணத்தை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டும். இதன் பொருட்டு கிராமங்கள் ஒன்றிணைய வேண்டும்.

இச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு எமக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு நான் முதன்மை தேரரிடம் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.