வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நாமல்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கை தொழிலாளர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

குவைத்தில் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 34 பெண்களை இலங்கைக்கு அழைத்து வர விமானப் பயணச்சீட்டுக்கள் தயார் செய்யப்பட்ட நிலையில், நாமல் ராஜபக்ச, சேனானி என்ற பெண்ணிடம், பயணச்சீட்டுக்களுக்கான பணத்தை சேகரிக்குமாறு டுவிட்டர் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாமல் ராஜபக்ச வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களை தவறாக வழி நடத்தி தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வருகிறார் எனவும் மனுஷ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி, சேனானி எந்த இந்த பெண், இதற்கு முன்னர் பணச் சலவைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர் என கூறியுள்ளார்.