தேசிய அரசாங்கம் என்பது ஒரு முடிச்சு - எரான் விக்ரமரத்ன

Report Print Steephen Steephen in அரசியல்

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கரு “ஒரு முடிச்சு” என நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நான் அரசியலுக்கு வரும் போது அரசியலுக்கு செல்ல வேண்டாம் என எனது நண்பர்கள் கூறினார்கள். எனக்கு கொள்ளையடிக்க முடியாது எனவும் கூறினர். நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

மாற்றத்தை ஏற்படுத்தவே நாங்கள் அரசியலுக்கு வந்தோம். அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பொதுவாக எடுத்துக்கொண்டால், அரசியல் கலாசாரம் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டாம்.

ஊழலுக்கு இடமளிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். அமைச்சர் என்றால், தனது சொத்து விபரங்களை நிறைவேற்று அதிகாரத்திடம் வழங்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்க வேண்டும்.

இதனை முடிச்சாகவே நான் கருதுகிறேன். அண்மையில் போட்ட முடிச்சுதான் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் மூலம் கொண்டு வரப்பட்ட தேசிய அரசாங்கம்.

தேசிய அரசாங்கம் நல்லது அதனை நான் எதிர்க்கவில்லை. அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நான் இணங்கவில்லை.

நான் கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் வருமான வரி திணைக்களத்திற்கு வரி செலுத்தி வருகிறேன்.

அமைச்சரவையில் இருக்கும் போது எமக்கு தொழிலையோ, வர்த்தகத்தையோ செய்ய முடியாது.

அமைச்சரவையே முக்கிய முடிவுகளை எடுக்கும். அமைச்சரவையில் இணைந்தால், தொழில் அல்லது வேலைகளில் இருந்து விலக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.