சுமந்திரன் உட்பட வரலாற்றில் இடம்பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வழங்கியுள்ளனர்.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் இலங்கை நிறுவனம் ஒழுங்கு செய்த நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் தமது அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாசுதேவ நாணயக்கார, விதுர விக்ரமரத்ன, தாரக பாலசூரிய மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே தமது சொத்து விபரங்களை இவ்வாறு பகிரங்கப்படுத்தியுள்ளனர்.