தேர்தல் முறையில் மாற்றம் செய்யவில்லை எனில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: தினேஷ் குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றால், எந்த பொதுத் தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் ஐக்கிய முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த எனது தலைமையில் நியமித்த குழுவின் பரிந்துரைக்கு அமைய தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாது போனால், தற்போதைய நாடாளுமன்றத்தை போலவே அடுத்து நாடாளுமன்றமும் ஸ்திரமற்றதாகவே இருக்கும். அப்படியான நாடாளுமன்றம் இருப்பது ஆட்சி நடத்த முடியாத நாடு.

70 வீதம் தொகுதி வாரியாகவும் 30 வீதம் விகிதாசார முறையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல் முறை அவசியம் என்பது ஆய்வுகள் மற்றும் எதார்த்த முறையில் தெளிவாகியுள்ளது.

போருக்கு பின்னர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தினால், நடத்தப்பட்ட விகிதாசார முறையிலான தேர்தல்களை தவிர ஏனைய அனைத்து தேர்தல்களிலும் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.