அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறு: அமைச்சர் சம்பிக்க ரணவக்க

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனைக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியது மிகப் பெரிய அரசியல் தவறு என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

போர் காரணமாக கைது செய்யப்பட்ட படையினர் மட்டுமல்லாது விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமான யோசனையை மீண்டும் ஆராய்வது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையை காட்டிக்கொடுத்ததாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தினார்.