மங்கள ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் : ஜனாதிபதி மைத்திரி புகழாரம்

Report Print Kamel Kamel in அரசியல்

நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஜனநாயகத்தை மதிக்கும் ஓர் தலைவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புகழாரம் சூட்டியுள்ளார்.

மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்விற்கு 30 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு மங்களவை பாராட்டியுள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான மங்கள சமரவீர பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்து வந்ததுடன் நாட்டுக்காகவும், மாத்தறை மக்களின் வளர்ச்சிக்காகவும் பாரியளவில் சேவையாற்றியுள்ளார்.

தனக்கு ஒப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்பினையும் அர்ப்பணிப்புடன் செய்யக்கூடியவர்.

இதேவேளை, எல்லா சந்தர்ப்பங்களிலும் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் ஒர் அரசியல்வாதி எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.