ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு புதிய நியமனங்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது கட்சிக்கான இரண்டு முக்கிய பதவிகளுக்கு நியமனங்களை இன்று வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்சியின் பிரசார செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தொழிற்சங்கங்களின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்னவும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.