நாட்டை ஒன்றிணைக்க இதுவே வழி! ரணில் கருத்து

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பிளவடைந்த நாட்டை ஒன்றிணைப்பது இலகுவான காரியமல்ல என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் வாழ்வின் நிறைவினையொட்டி இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அங்கு உரையாற்றிய அவர்,

பிளவடைந்த நாட்டை ஒன்றிணைப்பது இலகுவான காரியமல்ல. அரசியல் தீர்வொன்றுடனேயே அதனை செய்ய முடியும். எனினும் அதேவேளை அது சவால் மிக்கதுமாகும்.

ஆனால் பொருளாதாரத்தில் எவ்வாறு முன்னோக்கிச் செல்வது என்பது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும். அது சவாலானதாக இருந்தாலும் கூட அதனை ஏற்று முன்னோக்கி பயணிக்க வேண்டும். அதுவே நாட்டின் தற்போதைய தேவையாகும் என்றார்.