ஒரே வரிசையில் அமர்ந்த அரசியல் எதிரிகள்!

Report Print Murali Murali in அரசியல்

அரசியல் எதிரிகளாக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் நிகழ்வு ஒன்றில் ஒன்றாக கலந்துகொண்டிருந்தனர்.

அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் குறித்த அனைவரும் ஒன்றாக கலந்துகொண்டிருந்தனர். கொழும்பு அரசியலில் அண்மை காலமாக ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலையில், குறித்த நால்வரும் அரசியல் எதிரியானார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், சந்திரிகாவும் அண்மைக்காலமாக சந்தித்துக் கொள்வதை தவிர்த்து வருகின்றனர். அதுபோல் மகிந்த ராஜபக்சவை சந்திரிகா கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஒரே வரிசையில் நேற்றைய நிகழ்வில் அமர்ந்திருந்தனர்.

இதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு நிகழ்விலும் குறித்த நால்வரும் ஒன்றாக கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.