மும்மொழிக் கொள்கையை மீறும் வகையிலான செயற்பாடு குறித்து விளக்கம் கோரல்

Report Print Kamel Kamel in அரசியல்
93Shares

தமிழ் மொழியில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்றுக்கு சிங்கள மொழியில் பதில் அனுப்பி வைக்கப்பட்டமை குறித்து விளக்கம் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சுக்கு அண்மையில் தமிழ் மொழியில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த கடிதத்திற்கு சிங்கள மொழியில் பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தழிழில் அனுப்பிய கடிதத்திற்கு சிங்களத்தில் பதில் அனுப்பி வைத்தமை குறித்து அந்த அமைச்சின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் விவகார அமைச்சிற்கே சுவாமிநாதன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

எனினும் குறித்த அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் இந்த கடிதத்திற்கு சிங்கள மொழியில் பதில் அனுப்பி வைத்துள்ளார்.

தமிழ் மொழியில் அனுப்பி வைத்த கடிதத்திற்கு சிங்கள மொழியில் பதில் அனுப்பி வைத்தமை மும்மொழிக் கொள்கையை மீறும் வகையிலான செயற்பாடு எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி விசாரணை நடத்துவதற்கு அந்த அமைச்சு தீர்மானித்துள்ளது.