மாகாணசபைகளை கலைத்துவிடுங்கள்: மஹிந்த

Report Print Ajith Ajith in அரசியல்

மாகாணசபை தேர்தலை நடத்த முடியாவிட்டால் மாகாணசபை அமைப்பை கலைத்து விடலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள மஹிந்த தேசப்பிரிய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த எண்ணம் கொண்டிருக்காதுவிட்டால், மாகாண சபை அமைப்பை கலைத்துவிடுவது சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்த முடியாதுபோனால் இதனையே கட்டாயம் செய்தாக வேண்டும். ஏற்கனவே மாகாணசபை தேர்தலை நடத்துமாறுகோரி தமது அலுவலகம் ஜனாதிபதி, பிரதமர், மற்றும் சபாநாயகருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது.

இது தொடர்பில் மார்ச் மாதம் இறுதியிலாவது முடிவு ஒன்றை எடுக்குமாறு அந்தக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்தமுடியாதுபோனால், விகிதாசார முறை தொடர்பில் புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இதனை மார்ச் மாதத்துக்குள் அமைச்சரவை நிறைவேற்றுமானால் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.