நிலையான வருமானம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது! வரவு செலவு திட்டம் தொடர்பில் விமர்சனம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
63Shares

நாடாளுமன்றத்தில் எதையும் தெரிவிக்கலாம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்த நிலையான வருமானம் இருக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவு, திட்டமான இந்த வரவு செலவுத் திட்டம், சாதாரண மக்களைப் பலப்படுத்தவும் வறுமையை ஒழித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் அனைத்து மக்களினதும் அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது.

இவ்வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பேசிய தயாசிறி,

நிலையான வருமான வழியை அமைத்துக் கொள்ளாவிட்டால் வரவு-செலவு திட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துவது பாரிய சவாலாகும்.

முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது பாரிய சவாலாகும்.

ஏனெனின் நாடாளுமன்றத்தில் எதையும் தெரிவிக்கலாம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்த நிலையான வருமானம் இருக்கவேண்டும் என்றார்.