கனேடிய மாகாணங்களுக்கான கொன்சீயூலர்கள் நியமனம்

Report Print Ajith Ajith in அரசியல்

கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் எம்ஏகே கிரிஹாகம, கனடாவின் மூன்று கொன்சியூலர்களுக்கான கடிதங்களை கையளித்தார்.

கனேடிய உயர்ஸ்தானிகரக வளாகத்தில் இந்த நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதன்போது அல்பேட்டா, நோவா ஸ்கோட்டியா மற்றும் நியூ ப்ரேளன்விக் ஆகிய மாகாணங்களுக்கான கொன்சிலர்களுக்கான கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

இதன்படி, பில் ரொபட்ஸ்- அல்பேட்டாவுக்கும், மல்கம் ஏசி பின்டோ நோவா ஸ்கோட்டியாவுக்கும், சமீர ஜெயசேன- நியூ ப்ரௌன்வீக்குக்கும் கொன்சியூலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது புதிய கொன்சியூலர்கள் தமது மாகாணங்களில் இலங்கை –மற்றும் கனடாவின் உறவுகள் தொடர்பில் மேம்படுத்தல் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்று கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் எம்ஏகே கிரிஹாகம கேட்டுக்கொண்டார்.