மங்களவின் வரவு செலவுத் திட்டத்தை கிண்டல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
208Shares

முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டமானது கனவு மாளிகையை என்று மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தினை தெரிவிக்கும் போதே கட்சியின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று நிதியமைச்சர் மங்கள சமரவீர 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த வரவு செலவு திட்டம் குறித்து பேசிய அவர்,

இம்முறை வரவு செலவு திட்டம் மக்களுக்கு சகல விதத்திலும் நன்மையான ஒன்றாக அமையும் என ஆரம்பத்தில் இருந்து அரசாங்கம் கூறிவந்தது. ஆனால் இந்த ஆண்டுக்கு முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் ஒரு கனவு மாளிகை என்றே கூற வேண்டும்.

அனைத்து யோசனைகளும் சாதாரண மக்களுக்கு நன்மையான ஒன்றாக கருத முடியாது. இதில் வியாபாரிகளுக்கும் தனியார் துறைசார் நலன்கருதிய ஒன்றாகவே முன்வைக்கப்பட்டுள்ளது.

தனியார் மயப்படுத்தப்பட்ட லிபரல் கொள்கையுடைய வரவு செலவு திட்டத்தையே நிதி அமைச்சர் முன்வத்துள்ளார். இந்த வரவு செலவு திட்டம் ஒன்று கனவு மாளிகையே என்றார் கிண்டலாக.