வரவு செலவுத்திட்டம் எப்படியிருக்கிறது? சுமந்திரன் சொல்லும் பதில்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டமானது வரவேற்கத்தக்கது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது பொறுப்புணர்ச்சியுடன் செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு விசேடமாக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இதனை சரியான முறையில் எடுத்து செயற்படுத்தினால், வாழ்வதாரத்தை உயர்த்துவது மட்டுமன்றி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களையும் அதிகரிக்க முடியும்.

இதேவேளே மங்கள சமரவீர முன்வைத்த இந்த திட்டங்கள் வரவேற்கத்தக்கது என்றார்.