நாடாளுமன்றத்திற்கு வந்தார் சந்திரிக்கா!

Report Print Murali Murali in அரசியல்
592Shares

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்திருந்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாடாளுமன்றம் இன்று கூடியது.

இதன்போது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய வரவு செலவு திட்ட அமர்வுகளுக்கு வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், இராஜதந்திரிகள், இலங்கை முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர், மற்றும் அமைச்சின் செயலாளர்கள் என பலர் வருகைதந்திருந்தனர்.

அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தார். இதன் பின்னர் நிதி அமைச்சர் வரவு செலவு திட்ட உரையினை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.