அமைச்சர் ரிஷாட் சதொச விற்பனை நிலையத்திற்கு திடீர் விஜயம்

Report Print Theesan in அரசியல்

வவுனியா, நெளுக்குளம் சந்தியிலுள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் நகருக்கு இன்று காலை பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சென்றுள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னறிவித்தலின்றி சென்று அங்குள்ள விற்பனை பொருட்களின் தரம், பாவனையாளர்களுக்கு சரியான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்.

அத்துடன் சதொச விற்பனை நிலையத்தின் தூய்மை தொடர்பாகவும் அவதானம் செலுத்தியுள்ளார்.

Latest Offers