சில தூதுவர்கள் தமது எல்லை மீறி செயற்பட்டனர் - ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

சில நாடுகளின் தூதுவர்கள் தமது எல்லை மீறி பொலிஸ் திணைக்களத்தை தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்தமை தொடர்பாக கேள்வி எழுப்பியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று முற்பகல் ஊடகங்களின் பிரதானிகளை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொலிஸாரின் உள்ளக கதைகள் மிகவும் துயரமானது. இது குறித்து ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என கோருகிறேன். நான் சுயாதீன ஆணைக்குழுக்களை விமர்சித்தேன்.

அவற்றில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசினேன். பொலிஸ் துறையில் கீழ் மட்ட நிலையில் இருக்கும் அதிகாரிகளுக்கு சம்பள பிரச்சினை உள்ளது.

தமது சம்பளம் குறித்து பொலிஸ் அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர். சுயாதீன ஆணைக்குழுக்கள் சிறந்த எண்ணக்கரு. எனினும் அவற்றை கட்டுப்படுத்த சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.

அதேவேளை போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்தும் தினம் எனக்கு தெரியும்.

போதைப் பொருள் வியாபாரிகள் சிறைக்குள் இருந்தவாறு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

கடந்த 1976 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை மரண தண்டனை அமுல்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.