சாதாரண மக்களை ஒடுக்கவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வருவது பயங்கரவாதத்தை தடுக்க அல்ல , சாதாரண மக்களின் தொழிற்சங்க செயற்பாடுகளை தடுக்கும் நோக்கத்திலேயே அந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜாகொட குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

1979 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்தே புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது எனக் கூறப்பட்டாலும் யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னும் இரத்துச் செய்யப்படவில்லை.

நாட்டில் குற்றங்களுக்கான நிரந்தர சட்டம் உள்ளது. இதற்கு மேலதிகமாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்ய போவதாக கூறி அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வர முயற்சித்து வருகிறது.

நாட்டின் சாதாரண மக்களின் அமைப்பு ரீதியான அரசியல் செயற்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்ப்பை நிறுத்துவதற்காகவும் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.