கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க முன்வந்துள்ள நோர்வே

Report Print Sumi in அரசியல்

இலங்கையில் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு நோர்வே 60 மில்லியன் குரோன்களை வழங்க முன்வந்துள்ளதாக நோர்வே தூதரகத்திற்கான அரசியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்த ஆண்டு, கண்ணி வெடி தடுப்பு ஆண்டாக நோர்வே பிரகடனம் செய்துள்ளதுடன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த இலக்கை எய்த இலங்கைக்கு உதவிகளை வழங்க நோர்வே முன்வந்துள்ளதென நோர்வேயின் வெளி விவகார அமைச்சர் ஜன் மேரி எரிக்சென் சொரிட் தெரிவித்துள்ளார்.

நல்லெண்ண செயற்பாடுகளில் கண்ணி வெடி அகற்றல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.

இதனூடாக, யுத்த காலப்பகுதியில் பலவந்தமாக தமது பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் தமது பிரதேசங்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக திரும்பக்கூடிய வாய்ப்பு வழங்கப்படும் என கொழும்பில் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இராஜாங்க செயலாளர் மேரியன் ஹேகன் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers

loading...