நீங்கள் என்னை ஜனாதிபதியாக நினைக்கின்றீர்களா! மகிந்தவிற்கு சஜித் பதிலடி

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஜனாதிபதி பதவி ஆகியன தொடர்பில் இவர்களுக்கிடையில் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

கடந்த நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் சினிமாத்துறை, கலைத்துறை மற்றும் கலைஞர்களின் நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச பதில் தெரிவித்துக்கொண்டிருந்த நேரம் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட கலையுடன் தொடர்புபட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை நிறுத்தியதாகவும் இந்த ஆட்சியில் அவை மீண்டும் முன்னெடுக்கப்பட்டதாவும் தெரிவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் காலம் உள்ளது என கூறினார்.

இதன்போது பதில் தெரிவித்த அமைச்சர் சஜித், நீங்கள் என்னை ஜனாதிபதியாக கற்பனை செய்கின்றீர்களா, இதை என்னும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நீங்கள் இவ்வாறு நினைப்பீர்கள் என நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் இப்போது நான் கூறுவது ஜனாதிபதி குறித்த விடயம் அல்ல. இது உங்களின் காலத்தில் இடம்பெற்ற கலை அடக்குமுறை குறித்து நீங்களே எழுப்பிய கேள்விக்கான பதில்.

இந்த பதில்களை கூறும்போது உங்களால் கேட்டுக்கொண்டு இருக்க முடியவில்லை. காதுகள் வலிக்கின்றது என நினைக்கின்றேன். ஆனாலும் நான் இதனைக் கூறியே ஆகவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.