யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் யுத்த தடயங்கள் மறைந்து போயுள்ளன

Report Print Abdulsalam Yaseem in அரசியல்
81Shares

கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள யுத்த தடயங்கள் பல பிரதேசங்களில் மறைந்து போயுள்ள நிலையில் சம்பூரில் மாத்திரம் இன்றும் யுத்த தடயங்கள் காணப்படுகின்றன என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, சம்பூர் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

சம்பூரில் உள்ள பல குடும்பங்கள் போரினால் பாதிக்கப்பட்டு வாழ்விடங்கள் இன்றி காணப்படுகின்றனர். இவர்களுக்கான வீடமைப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலும், எமது மாகாணத்திற்குட்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த 150இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திருகோணமலையில் கடமையாற்றி வருகின்றனர்.

தூர இடங்களிலிருந்து வரும் அவர்களால் தமது கடமைகளை சரியாகச் செய்ய முடியாதுள்ளது. இதற்காக அவர்களை அவர்களது பிரதேசங்களில் கடமை புரியும் வகையில் விரைவில் இடமாற்றங்களை செய்ய ஆலோசித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.