நாலக டி சில்வாவுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் உள்ளன

Report Print Steephen Steephen in அரசியல்

முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவுக்கு எதிரான சாட்சியங்கள் குறித்து இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

சந்தேக நபருக்கு எதிரான சாட்சியங்களை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், சந்தேக நபருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை கவனத்தில் கொண்டே நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எனினும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஜித் பத்திரன, தனது தரப்பு வாதியை விளக்கமறியலில் வைக்குமளவுக்கு போதுமான சாட்சியங்கள் இல்லை எனவும் இதனால், அவரை விடுதலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers