அமைச்சர் மங்கள கூறியது பொய் - மகிந்த ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சம் வீடுகளுக்கு கழிவறைகள் இல்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறிய தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அதிகாரிகள் தவறான தகவல்களை வழங்கியிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

“ பாருங்களேன் ஹம்பாந்தோட்டையில் ஒரு லட்சம் வீடுகளுக்கு கழிவறைகள் இல்லையாம். இது எவ்வளவு பெரிய பொய்?. அமைச்சரிடம் அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுத்திருக்கலாம். 15 ஆயிரம் வீடுகள் பற்றிதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியானால் எப்படி ஒரு லட்சம் கழிவறைகள் இல்லாமல் போகும்?” எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு பெரிய சுமை, அனைத்தையும் மூடி மறைத்து செய்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

Latest Offers