கரன்னாகொடவுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்: சட்டமா அதிபர்

Report Print Steephen Steephen in அரசியல்

மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உட்பட சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு எதிராக ஆட்கடத்தல், கொலை, அதற்கு உடந்ததையாக இருந்தமை, கொலை செய்ய திட்டமிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் கூறியுள்ளது.

மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜனக்க பண்டார ஆஜராகியதுடன் இந்த தகவலை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Latest Offers