மைத்திரி மற்றும் ரணிலை வாகனத்தின் விளக்குகளுக்கு ஒப்பிட்ட எம்.பி

Report Print Steephen Steephen in அரசியல்

நாடு தற்போது ஆபத்தில் இருப்பதால், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வாகனம் ஒன்று இருந்தது. 51 நாள் அரசாங்கத்தின் போது இந்த வாகனத்தின் கிளைச் உடைந்து போனது. நாங்கள் அந்த கிளைச்சை சரிசெய்து விட்டோம்.

கடும் இருட்டில், கடும் பனி மூட்டத்திற்கு மத்தியில் எமக்கு ஹப்புத்தளை மேட்டில் ஏற வேண்டியுள்ளது.

தற்போது நாட்டின் இரண்டு பிரதான மின் விளக்குகளும் (ஜனாதிபதி மற்றும் பிரதமர்) ஒளிரப்பட வேண்டும்.

தேவை ஏற்பட்டால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற போஃக் விளக்கும் இருக்கின்றது. இந்த விளக்கை தேவையான நேரத்தில் ஒளிரவிடலாம் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers