இலங்கையில் திரைப்படம் தயாரிப்போருக்கு கிடைக்கும் வாய்ப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய திரைப்படத் தயாரிப்புகளுக்கு வரி மானியம் வழங்கப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அண்மையில் நிலையியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைய எழுப்பி இருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

திரைப்படங்களை தயாரிக்க புதிய தொழிற்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்ய இந்த வரி மானியம் வழங்கப்படும் எனவும் ஈ டிக்கட்டிங் முறையை திரையரங்களுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers