இரண்டாவது விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது

Report Print Steephen Steephen in அரசியல்

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பெரிய நிதி மோசடிகள் மற்றும் ஊழல்களை விசாரிக்க மூன்று நீதிபதிகளை கொண்ட விசேட மேல் நீதிமன்றத்தின் இரண்டாவது நீதிமன்றத்தை முதலாவது விசேட மேல் நீதிமன்ற அமைந்துள்ள வளாகத்தில் ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1978 இலக்கம் 2 நீதி சேவை அமைப்பு சட்டத்தின் கீழ் நீதியமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட மேல் நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.

விசேட மேல் நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும் திருத்தச் சட்டமூலம் கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதனடிப்படையில், முதலாது விசேட மேல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

Latest Offers

loading...