மக்கள் விடுதலை முன்னணியினரிடம் மகிந்த விதித்த நிபந்தனை!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டுமானால், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் தேர்தல் முறைமை என்பன மாற்றம் செய்யப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் அரசியலமைப்புத் தொடர்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதேவேளை, 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி எதிர்க் கட்சித் தலைவருடன் இக்கலந்துரையாடலை முன்னெடுத்துள்ள நிலையில் மேற்படி நிபந்தனையை முன்வைத்துள்ளார்.

இன்று மாலை 4.00 மணிக்கு எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, டளஸ் அழகப்பெரும ஆகியோர் மகிந்த ராஜபக்ஷ சார்பில் கலந்துகொண்டுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னனியின் சார்பில், அதன் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் சுனில் ஹதுன்னெத்தி ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளனர்.