ஏன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அரசு கொண்டுவருகிறது? உண்மையை உடைக்கும் முன்னிலை சோஸலிச கட்சி

Report Print Ajith Ajith in அரசியல்

அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வர முனைவது தொடர்பில் முன்னிலை சோஸலிச கட்சி மாற்றுக்கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சட்டத்தின்மூலம் பயங்கரவாதத்தை தடுப்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல மாறாக, பொதுமக்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக முன்னிலை சோஸலிஸக்கட்சியின் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தக் கருத்தைக்கூறினார்.

போர் முடிவடைந்து 10 வருடங்களாகியும் பயங்கரவாத தடைச்சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை.

இந்தநிலையில் குற்றங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு அடிப்படை நடவடிக்கையாகவே இருக்கமுடியும் என்றும் ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.