வேலை வாய்ப்புக்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்: முன்னாள் ஜனாதிபதி

Report Print Thileepan Thileepan in அரசியல்

வடக்கில் நெசவு கைத்தொழிலை அபிவிருத்தி செய்து அதனூடாக வேலை வாய்ப்புக்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா, மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வட பகுதியில் போரால் பாதிக்கப்பட்டுள்ள பலரும் இன்று பொருளாதார ரீதியாக பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அதில் பெண்களின் நிலை அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அத்துடன் வடக்கில் வேலையில்லா பிரச்சினையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வடக்கில் நெசவுக் கைத்தொழிலை விருத்தி செய்ய இந்த அரசாங்கத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் பலர் வேலைவாய்ப்புக்களைப் பெறக் கூடியதாக இருப்பதுடன், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

இதனை எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.